6வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம்  

சென்னையில், 6-வது நாளாக பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 101 ரூபாய் 53  காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

6வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம்   

சென்னையில், 6-வது நாளாக பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 101 ரூபாய் 53  காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது. நேற்று  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  101 ரூபாய் 27 காசுகளுக்கும், டீசல் விலை 96 ரூபாய் 93காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது. விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.