தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 100ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை...

தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் கிருஷ்ணகிரி  உள்பட 12 மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும்  அதிர்ச்சியில்  உறை்நதுள்ளனர்.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 100ரூபாயை  தாண்டியது பெட்ரோல் விலை...

சர்வதேச  கச்சா எண்ணை நிலவரத்திற்கு  ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை நாள் தோறும்  எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. முந்தைய  காங்கிரஸ் ஆட்சியில் 70  ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை தற்போதை மோடி ஆட்சியில் பல மாநிலங்களில் 100  ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. டீசல்  விலை ஏற்றத்தால்  லாரி  உள்ளிட்ட வாகனங்களின் வாடகை பல மடங்கு  உயர்ந்திருப்பதால் காய்கறிகளின் விலையும் கனிசமாக உயர்ந்திருக்கிறது. மத்திய மோடி அரசின் விலை ஏற்றத்தால்  ஏழை எளிய  நடுத்தர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு  ஆளாகியுள்ளனர். 

விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு  தரப்பினரும் கோரிக்கை விடுத்து  வரும் நிலையில்  ஆங்காங்கே  மத்திய அரசுக்கு எதிராக போராட்டமும் வெடித்து வருகிறது. ஆனால் அதைப்பற்றி  மத்திய மோடி அரசு சிறிதும் கவலை கொள்ளாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் கிருஷ்ணகிரி  உள்பட 12 மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும்  அதிர்ச்சியில்  உறைந்துள்ளனர்.

ஓசூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101  ரூபாய் 17  காசுகளுக்கும் டீசல் லிட்ட ஒன்று  95 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை போன்று  பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் எகிறி கொண்டே வருவதால் அன்றாடம் காய்ச்சிகள் செய்வதறியாது  திண்டாடி வருகின்றனர். சம்பாதிக்கும் தினகூலியில்  ஒரு பகுதியை பெட்ரோலுக்கு  செலவிட வேண்டியுள்ளதாக வாகனஓட்டிகள். கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.. தமிழகத்தை விட கர்நாடகாவில்  பெட்ரோல் விலை குறைவாக இருப்பதால் கர்நாடக மாநில எல்லைக்கு வாகன ஓட்டிகள் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
 
இதனிடையே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நெல்லை வண்ணார்பேட்டையில்  திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர  மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

ஏழை எளிய சாமினிய மக்களின் சிரமங்களையும் பாதிப்புகளையும் உணராத ஒரு அரசு மத்தியில் ஆட்சி  செய்து  கொண்டிருப்பதாக அரசியல்  தலைவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை அனைத்து  தரப்பு  மக்களையும் பாதிக்க கூடிய பெட்ரோல் டீசல்  விலையை குறைக்க மத்திய பாஜக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அரசியல்  தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.