மருந்துவ சுற்றுலா - 18 லட்சம் டாலர் வருவாய் - மேம்படுத்த திட்டம்

மருத்துவ சுற்றுலாவில் கடந்தாண்டு 18லட்சம் டாலர் வருவாய் வந்த நிலையில், இதனை பெரிய அளவில் மேம்படுத்த சுற்றுலத்துறை திட்டம். முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் boat restaurant பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி சென்னை தீவுத்திடலில் நாளை சென்னை விழா - 2023 - சர்வதேச கைத்தறி கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா மற்றும்,
29 ஆம் தேதி மருத்துவ சுற்றுலா கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
உலகளவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சுற்றுலாத்துறை சிறந்து விளங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவழிக்க சுற்றுலாத்துறை சார்பில் தேவையான பணிகள் எடுக்கப்படுகிறது.
சென்னை திருவிழா 2023-யை நாளை தீவுத்திடலில் விளையட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். மே 15வரை இந்த திருவிழா நடைபெறவுள்ளது. கைவினை, கைத்தறி பொருட்களும், உணவுத்திருவிழாவும் இதில் உள்ளது. கைவினை பொருட்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திருவிழா பெரிதும் உதவும் எனவுக், இந்த கண்காட்சியில் 10 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 23 ஊர்களில் இருந்து வந்து கலந்து கொள்ள உள்ளனர். மேலும், அந்த திருவிழாவில் மொத்தம் 311 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை எந்தளவிற்கு வளருகிறதோ, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வளரும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | தஞ்சையில் மாமன்ற கூட்டத்தின் போது திமுக, அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு...!
தொடர்ந்து பேசிய அவர், இந்த திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த திருவிழா ஏற்படுத்தும் என்றார். மேலும், இதை தொடர்ந்து, நாளை மறுநாள் மருத்துவ மாநாடு ஐடிசியில் நடைபெற உள்ளது. மருத்துவ மாநாட்டிற்கு 20நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். முக்கிய நோய்கள் குறித்தும், அதற்கான மருத்துவ வசதிகள் குறித்தும் இந்த மாநாட்டில் கலந்துரையாட உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு மருத்துவத்துறை இன்னும் ம முன்னேற்றம் அடையும் என்றார்.
மருத்துவ சுற்றுலா மூல கடந்தாண்டு 18லட்சம் டாலர் வருவாய் வந்த நிலையில், இதனை பெரிய அளவில் மேம்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் Boat restaurant பணிகள் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிறைவு பெறும் என்ற அவர், கோவை, நீலகிரி போன்ற இடங்களிலும் boat restaurant அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.