மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு குழு கூட்டம்...!

திருப்பத்தூரில் மாவட்ட அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு குழு கூட்டம் நடைபெற்றது.
மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு குழு கூட்டம்...!
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கச்சேரி திருப்பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் விஜயகுமார் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலிருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் அரசு மருத்துவமனைகளில் மக்கள் நலன் கருதி கால முறை ஊதியத்தில் 889 மருந்தாளுனர் பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப உத்தரவிட்ட தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றும், 889 மருந்தாளுநர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவ தேர்வு ஆணையத்தை, மாநில செயற்குழு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும்  அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் முறையாக பராமரித்திட குளிர்சாதன வசதியுடன் கூடிய மருந்துகள் கிடைக்க அமைத்திட வேண்டும் போன்ற  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com