நீலகிரியில் தொடங்கியது... புகைப்படக் கண்காட்சி....!

நீலகிரியில் தொடங்கியது... புகைப்படக் கண்காட்சி....!
Published on
Updated on
1 min read

நீலகிரியின் அழகினை கண்முன் நிறுத்தும் புகைப்படக் கண்காட்சி துவங்கியது, உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நீலகிரி குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற ஆ.ராசா உறுப்பினர் ஆகியோர் இன்று உதகையில் துவக்கி வைத்து, நீலகிரியின் சிறப்பையும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக ஆ.ராசா பேட்டி..

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவர மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு நேற்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிகள் காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. 
இந்நிலையில் உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை காட்சிகள், மலைமுகடுகள், அரிய வகை பறவை இனங்கள், வனவிலங்குகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர், கோத்தர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் இம்மாவட்டத்தில் வாழும் அறிவகை வன உயிரினங்களின் புகைப்படங்களும் இந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

நீலகிரியில் சிறப்புகள் குறித்த இந்த புகைப்படங்கள் காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இன்று துவங்கிய இக்கண்காட்சி மே மாத இறுதி வரை நடைபெறுகிறது.
மேலும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா கூறுகையில், நீலகிரி மாவட்டத்தின் தனி சிறப்பினையும், இயற்கை அழகையும் நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையையும் அதேபோல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இந்நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித், மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com