துப்பாக்கியுடன் ஏரிக்குள் பதுங்கிய வழிப்பறி கொள்ளையர்கள்...... போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

காஞ்சிபுரம் அருகே சாலையில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்று ஏரிக்குள் பதுங்கிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கியுடன் ஏரிக்குள் பதுங்கிய வழிப்பறி கொள்ளையர்கள்...... போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னளூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. சுங்கசாவடி ஊழியரான இவர் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவர், இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

நகையை பறிக்கொடுத்த இந்திராணி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் மர்மநபர்களை துரத்தி சென்று பிடிக்க முயற்சித்தனர். அப்போது மர்மநபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி பொதுமக்களை நோக்கி சூடுவது போல் பாவனை செய்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் பயந்து சிதறி ஓடினர்.

பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பித்து சென்ற மர்மநபர்கள் இருவரும்,சுங்கசாவடி அருகில் இருந்த பென்னளூர் ஏரி பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் சரக போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி வைத்துள்ள கொள்ளையர்களை தங்களது பாதுகாப்பு கருதி சுட்டு பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.