எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரை சோதனையிட திட்டம்? கந்தசாமி அதிரடி ...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரை சோதனையிட திட்டம்? கந்தசாமி அதிரடி ...

  2014 முதல் 2018 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் திட்டபணிகளுக்காக ஒப்பந்தங்கள் போட்டதில் ரூ 811 கோடி முறைகேடு செய்துள்ளதாக, கடந்த அதிமுக ஆட்சியில் உள்துறை அமைச்சராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இருந்த போது  புகார்கள் எழுந்தன. இதற்கிடையில் அப்போதிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் முகாந்திரம் ஏதும் இல்லை என கூறி விட்டனராம். 

இதனைதொடர்ந்து இந்த புகாரை களைந்தெடுத்த திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் வழக்கு போட்டனர். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில் லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அவரிடம் அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் முதல்வர் ஸ்டாலின் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. 

அதனைதொடர்ந்து எஸ் பி வேலுமணிக்கு எதிராக  நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்து நேற்று காலை முதல் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் முக்கியமாக வேலுமணிக்கு நெருக்கமான  நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னை எம்எல்ஏ விடுதியில் வைத்து எஸ் பி வேலுமணியிடம் 10 மணி நேரத்திற்கு மேல் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.  காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரொக்கப் பணம், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை,  மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் ஹார்ட் டிஸ்க்களும் வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அதிலும் குறிப்பாக அறக்கட்டளை மூலமாக பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கி லாக்கரில் அது தொர்பான ஆவணங்கள் உள்ளதா என வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனைகள் நடந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை தலைவர் கந்தசாமி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.