தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள்!! கடும் கண்டனம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அவமதித்தது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து டுவிட்டர் வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள்!!  கடும் கண்டனம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!!

குடியரசு தின விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைத்துள்ளது..

அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர் ஒருவர், ‘ தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அதிகாரிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது’ என்று கூறினார். இவர்களின் பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளின் இந்த தவறான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்தவகையில், தற்போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அவமதித்தது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து டுவிட்டர் வாயிலாக பாடல் மூலம்  தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.