சங்கராபுரம் பட்டாசுக்கடை விபத்து எதிரொலி... திருக்கோவிலூரில் பட்டாசு கடைகளில் சோதனை...

திருக்கோவிலூர் நகரில் உள்ள பட்டாசு கடைகளில் போலீசார், வருவாய் துறையினர் சோதனை.

சங்கராபுரம் பட்டாசுக்கடை விபத்து எதிரொலி... திருக்கோவிலூரில் பட்டாசு கடைகளில் சோதனை...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 26ஆம் தேதி பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள 13 பட்டாசு கடைகள் மற்றும் 2 பட்டாசு தயாரிக்கும் ( நாட்டு வெடி) இடங்களை திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் குமரன், திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டவர்களின் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது, பட்டாசு கடையின் உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற்றுள்ளனர் எனவும், அவர்கள் பெற்றுள்ள அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும், அதேபோன்று பட்டாசு கடைகளில் பராமரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆன தீயை அணைக்க பயன்படும் தண்ணீர் மணல் சிலிண்டர்கள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தனர்.