உள்ளாட்சி தேர்தல்: கடம்பூர் பேரூராட்சியில் போலீசார் குவிப்பு... நெல்லை சரக டிஐஜி ஆய்வு

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்பதால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படமால் இருக்கும் வகையில் 2 டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: கடம்பூர் பேரூராட்சியில் போலீசார் குவிப்பு... நெல்லை சரக டிஐஜி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களில் முன் மொழிந்தவர்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  

இந்த சூழ்நிலையில் நாளை வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படமால் இருக்கும் வகையில் 2 டிஸ்பி, 3 இன்ஸ்பெக்டர் மற்றும் 100 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், கடம்பூர் பேரூராட்சி பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.