பொங்கல் பண்டிகைக்கு பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு - சங்கர் ஜிவால்

பொங்கல் பண்டிகைக்கு பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு   - சங்கர் ஜிவால்

சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி பொழுது போக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

கடற்கரை பகுதிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஓராண்டில் கடலில் மூழ்கி உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அ.தி.மு.க. வினரை தமிழ்நாட்டு மக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் - காங்கிரஸ்

சென்னை பெசன்ட் நகர்  எலியட்ஸ் கடற்கரை பகுதியில்  28 சி சி.டி.வி கேமராக்களுடன் புதிகாக கட்டப்பட்டுள்ள காவல் உதவி மையம்,  கண்காணிப்பு கோபுரம்,   மற்றும்  மெரினா கடற்கரையில் 4 காவல் உதவி மையங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்.

சென்னையில் கடற்கரை பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்தாண்டை விட இந்த ஆண்டு கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, குறிப்பாக மெரினா உயிர் காக்கும் பிரிவு தொடங்கப்பட்டது, ட்ரோன் கேமராக்கள் மூலம் கடற்கரையில் கண்காணிப்பது மற்றும் மெரினா பெட்ரோல் என தொடர்ந்து காவலர்கள் இறந்து போனில் ஈடுபட வைத்தது ஆகிய நடவடிக்கைகள் காரணமாக இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் விரைவில் ட்ரோன் காவல் நிலையம் தொடங்கப்பட உள்ளது ஒன்பது ட்ரோன் கேமராக்களுடன் சென்னை பிரதான கடற்கரை பகுதியான மெரினா மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதன் மூலம் மேலும் உயிரிழப்பு மற்றும் குற்றங்கள் குறையும்.

பெசன்ட் நகர் கடற்கரை பொறுத்தவரை அந்த பகுதியில் சாலையிலும் மணற்பரப்பிலும் 28 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் ய்தவி மையம் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

காணும் பொங்கல் விழாவை யொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி கடற்கரையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார். சென்னையில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் குதிரைப்படை மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 4 காவல் உதவி மையங்கள் அமைத்து கண்காணிக்க உள்ளதாகவும்.பொது மக்கள் தங்கள் குழந்தைகளை கடற்கரை மணல் பரப்பிற்கு அழைத்து வரும்போது  காணமல் போனால் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பழையன கழிதலும் புதியன புகுதலும்... போகியைக் கொண்டாடும் தமிழர்கள்

ஆளுநர் குறித்து பேசிய திமுக நிர்வாகி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்விக்கு விரைவில் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்தி குறிப்பு காவல்துறை தரப்பில் வழங்கப்படும் என தெரிவித்தார்.