இனிமேல் திருப்பதியில் அரசியல் பேசகூடாது - பாஜக

திருப்பதி மலைக்கு வரும் பிரமுகர்கள் பேட்டி என்ற பெயரில் திருப்பதி மலையில் அரசியல் பேசுவதை சகித்து கொள்ள இயலாது.

இனிமேல் திருப்பதியில் அரசியல் பேசகூடாது - பாஜக

திருப்பதி மலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, சாமி தரிசனம் என்ற பெயரில் திருப்பதி மலைக்கு வரும் பிரமுகர்கள் பேட்டி என்ற பெயரில் திருப்பதி மலையில் அரசியல் பேசுவதை சகித்து கொள்ள இயலாது என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக திருப்பதி மலைக்கு வரும் அரசியல் பிரமுகர்கள் சாமி கும்பிட்ட பின் கோவில் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.அப்போது, பேட்டி என்ற பெயரில் அரசியல் பேச துவங்கி விடுகின்றனர் .அதுவும் அடுத்த கட்சியினரை சபிப்பது, சாபம் இடுவது ஆகிவை போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும் படிக்க | மாணவர்கள் போதை பொருட்கள் உபயோகிப்பதற்கு நான் எப்படி ? உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி கேள்வி?

 சாமி கும்பிட வந்த இடத்தில் இது தேவையில்லாத வேலை.

 திருப்பதி மலையில் அரசியல் பேச்சு கூடாது என்று தேவஸ்தான நிபந்தனைகள் உள்ளன.
 தேவஸ்தான நிபந்தனையையும் மீறி அவர்கள் அவ்வாறு செயல்படுகின்றனர்.

 இனிமேல் யாராவது திருப்பதி மலையில் அரசியல் பேட்டி கொடுத்தால் அவர்கள் திருப்பதிமலையில் இருந்து கீழே இறங்கி செல்லும்போது அடிவாரத்தில் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்வோம் என்று அப்போது எச்சரித்தார்.