பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு... உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு... 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு... உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு... 

சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரத்து 68 விரிவுரையாளர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி. மையம் மூலம் வரும் 28 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை கணிணி வழியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், இதில் தேர்வர்கள் அருகில் உள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் மையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர் என்றும் கூறினார்.

அதனடிப்படையில், தேர்வர்கள் அருகிலுள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதுவது குறித்து புதிய அரசாணை இன்று வெளியிடப்படும் என கூறிய அவர், 129 மையங்களில் தேர்வர்களுக்கு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை ஒத்திவைக்கப்படுவதோடு, இதற்கான பணிகள் மேற்கொள்ள சில நாட்கள் ஆகும் என்பதால், இந்த தேர்வை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு பின்னர் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.