கனமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கனமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
Published on
Updated on
1 min read

கனமழை பெய்யக் கூடிய மாவட்டங்களில் சீரான மின் வினியோகம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கனமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீரான மின் வினியோகத்திற்காக தயாராக உள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் குறித்து பட்டியலிட்டார். மாவட்டம் வாரியாக மின்வாரிய அதிகாரிகள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் சீரான மின் வினியோகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமலாக்கத்துறை இயக்குநரா ?

தன்மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கை பாயும் என்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குநரா என கேள்வி எழுப்பினார். இதில் இருந்து அமலாக்கத்துறையை மத்திய அரசு எப்படி கையாள்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com