சாலை பள்ளத்தை சரிசெய்த போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்...

தொடர் மழையால் சாலையில்  வாய்க்கால் போல் பெரிய பள்ளம் இருப்பதை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை அதிகாரிகள். விபத்து ஏற்படும் முன் வாகன ஓட்டிகளை  பாதுகாக்க வேண்டும் என்று காவல்துறையே மண்வெட்டியால் மண் எடுத்து பள்ளத்தை மூடினார்கள். 

சாலை பள்ளத்தை சரிசெய்த போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சென்னை டு சேலம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தொடர் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையின் குறுக்கே  பெரிய வாய்க்கால் போல் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அதிகளவு  வாகனங்கள் செல்வதால் வாகன விபத்துக்கள் ஏற்படும். அபாரமான பள்ளத்தை மூடி சரிசெய்ய வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எதையும் கண்டுகொள்ளாமல் செவிடன் காதில் சங்கு ஊதுவதுபோல் இருந்தனர்.

அதனால் விபத்து ஏற்படும் முன் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று நல்லுள்ளம் கொண்ட காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையின் குறுக்கே இந்த பெரிய பள்ளத்தை டிஎஸ்பி மணிமொழியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வாசன் தலைமை காவலர்கள் சக்திவேல், திருஞானம், ஆறுமுகம் ஆகிய போலீசார் சாலையோரத்தில் இருந்து  மண்வெட்டியால் மண் எடுத்து பள்ளத்தை முற்றிலும் மூடினார்கள். காவல் துறை அதிகாரிகளின் இச்செயலை செய்வதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினார்கள்.