விண்ணை தொடும் பெட்ரோல் விலை.. சைக்கிள் ஓட்டி எதிர்ப்பை தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்...

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. இதேபோல் சமையல் எரிவாயு உருளை மற்றும் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து, தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தில், சைக்கிளில் வந்து பிரமேலதா விஜயகாந்த் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.