"உதயநிதிக்கு சின்ன வயசு, சிறிது நாவடக்கம் தேவை" பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!!

Published on
Updated on
1 min read

சானாதனம் குறித்து பேசி நாடு முழுவதும் திமுக எதிா்ப்பை சம்பாதித்து வருவதாக தேமுதிக பொருளாளா் பிரேமலதா விமா்சித்துள்ளாா். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். 

மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு தையல்மிஷின், சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை வழங்கினார். 

பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "மூன்றாவது அணி வரவே வாய்ப்பில்லை. அப்படி வந்தாலும் வெற்றி பெறாது. மக்களுக்கு நல்லது செய்பவர்களுடன் தான் தேமுதிக கூட்டணி வைக்கும்" என்றார். 

மேலும், " ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சனாதனம் பற்றி பேசி இந்தியா முழுக்க எதிர்ப்பை திமுக சம்பாதித்து வருகிறது. உதயநிதிக்கு சின்ன வயசு, சிறிது நாவடக்கம் தேவை" என்றார்.

மேலும், "பொன்மாணிக்க வேல் நேர்மையான போலீஸ் அதிகாரி, தமிழகம் முழுக்க கோயில்களில் களவு போன சிலைகளை மீட்டுள்ளார்" எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com