நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பார்- தொல். திருமா நம்பிக்கை  

நீட் தேர்வு விலக்குக்கு சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பார் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.  

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான போராட்டத்தில் அப்போதைய அரசு எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்தது என்ற அவர், அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது என்றார்.

மேலும் ஏ கே ராஜன் குழு விரிவான அறிக்கையை வழங்கியுள்ளது. அதன்படி பெரும்பான்மை ஆதரவுடன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆதாரமாக, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நீட் தேர்வு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளது என்றார். நீட் தேர்வு விலக்குக்கு வலுசேர்க்கும் அளவுக்கு ஆதாரமாக இருக்கும். நிச்சயம் குடியரசுத்தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக கூறினார்.