70 வருட ஆட்சியில் முடியாததை 7 வருட ஆட்சிக்காலத்தில் சாதித்துள்ளார் பிரதமர் மோடி- முருகன் பெருமிதம்  

வெளியுறவு, பாதுகாப்பு என அனைத்திலும் இந்தியா வளர்ச்சி அடைந்த தேசமாக இருப்பதற்கு பிரதமர் மோடியின் தான் ஆட்சி தான் காரணம் என்றும், 70 வருடங்களில் முடியாததை 7 வருட ஆட்சிக்காலத்தில் சாதித்து உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்தார்.  

70 வருட ஆட்சியில் முடியாததை 7 வருட ஆட்சிக்காலத்தில் சாதித்துள்ளார் பிரதமர் மோடி- முருகன் பெருமிதம்   

மாணவர்கள் எதிர்காலத்தில் பிரதமராகும் போது, அவர்களுக்கு பிரதமர் மோடியின் சாதனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது  பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை புரசைவாத்தில் உள்ள  தர்மபிரகாஷ் மண்டபத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான  புகைப்படக் கண்காட்சியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அப்போது நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன் கூறுகையில், நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ஜன்தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அரசின் மானியங்கள் நேரடியாக அவர்கள் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் திட்டத்தை உருவாக்கியவர் பிரதமர் என்றார். 

மேலும் 9 கோடிக்கும் அதிகமானோர் சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முருகன், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, வெளியுறவு, பாதுகாப்பு என அனைத்திலும் இந்தியா வளர்ச்சி அடைந்த தேசமாக இருப்பதற்கு பிரதமர் மோடியின் தான் ஆட்சி தான் காரணம் எனக் கூறினார். இந்நிலையில் 70 வருடங்களில் முடியாததை 7 வருட ஆட்சிக்காலத்தில் சாதித்து உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.