புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. 

அதன்படி குறிப்பிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com