ஆஸ்கர் விருது பெற்ற தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்தித்தார் பிரதமர் மோடி...!

ஆஸ்கர் விருது பெற்ற தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்தித்தார் பிரதமர் மோடி...!

நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை பார்வையிட்ட பிறகு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு  பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

முதுமலையில் உள்ள யானைகள் மற்றும் புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் வளர்க்கப்படும் யானைகளுக்கு உணவுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து யானைகள் பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தியது. இதையடுத்து ஆஸ்கர் விருது வென்ற the elephant whisperers என்ற ஆவண திரைப்படத்தில் நடித்த யானை பாகன்களான பொம்மன் பெள்ளியை சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார். 

தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் தேசிய புலிகள் காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதனைதொடர்ந்து மசினகுடி ஹெலிஹாப்டர் தளத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு காரிலிருந்து வெளியே நின்றவாறு கையசைத்து சென்றார்.

இந்நிலையில் தனது 2நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அங்கிருந்து ராணுவ ஹெலிஹாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com