பிரதமரின் உயிர்காக்கும் விருது விவசாயி மகனான தனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி :  காவலர் ராஜ்கண்ணன்

பிரதமரின் உயிர்காக்கும் விருது விவசாயி மகனான தனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி : காவலர் ராஜ்கண்ணன்

பிரதமரின் உயிர்காக்கும் விருது விவசாயி மகனான தனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக காவலர் ராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார். 
Published on

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவருடைய மகன் ராஜ்கண்ணன். இவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  ராஜ்கண்ணன்  பணியாற்றி வந்த போது கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்த ராம்குமாரை காப்பாற்றியுள்ளார்.

இதனால் 1 மணி நேரம் பணிக்கு தாமதமாக சென்ற காவலர் ராஜ்கண்ணன் இந்த சம்பவம் குறித்து அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜிடம் கூறியுள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி. தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் உயிர் காக்கும் விருதுக்காக பரிந்துரை செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதமர் உயிர்காக்கும் விருதுக்கு அவர் பெயரை பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து 2018ம் ஆண்டிற்கான உயிர்காக்கும் பிரதமர் விருது காவலர் ராஜ்கண்ணனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 14 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  இவருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com