கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை கொடுக்கப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை கொடுக்கப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா மூன்றாவது அலை வரும்பட்சத்தில்  அதனை  சமாளிக்க அரசு  தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.. தடுப்பூசி வருகைக்கு ஏற்ப மக்களை வரவழைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்வும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மேலும் கோவிஷில்டு, கோவேக்சின் ஆகிய இரண்டும் தகுதியுள்ள தடுப்பூசிகள் தான் என்றும் அவர் விளக்கம் அளித்தார். சென்னையை பொறுத்தவரை முழுமையாக தொற்று   குறைந்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  குறிப்பிட்டார். 

முன்னதாக சைதாப்பேட்டையில் உள்ள அண்ணை வேளாங்கண்ணி கல்லூரியில் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார். திமுக சிறுபான்மை நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி  நடைபெற்றது.