மத்திய அரசின் 12 துறைகளில் தனியார் துறை அதிகாரிகள்..!!

மத்திய அரசின் 12 துறைகளில் தனியார் துறை அதிகாரிகள்..!!
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் 12 துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளில் தனியார் துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. 

மத்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள் இந்திய பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் வழியாக  ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள்  வகைபடுத்தப்பட்டு பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில்  2018 ஆம் ஆண்டு மத்திய அரசின் உயர் மட்ட பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை நேரடியாக நியமித்து உத்தரவிட்டது. இதில் 10 இணைச் செயலாளர்கள் மட்டத்திலான அதிகாரிகள் அப்போது நியமிக்கப்பட்டனர். 

பின்னர் 2021 ஆம் ஆண்டு 31 அதிகாரிகள் இது போல நியமிக்கப்பட்டனர். தற்போது 3வது முறையாக தனியாரிலிருந்து நேரடியாக அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், வேதிப்பொருள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை உள்பட 12 துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இதில் 16 பேர் துணை செயலாளர் மற்றும் இயக்குனர்களாகவும், 4 பேர் இணை செயலாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com