
2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார்.
அதில் குறிப்பாக, பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும், சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்பாளர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்.