காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்... மருத்துவமனையில் சிவசங்கர் பாபா....

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா-வை இன்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிவசங்கர் பாபா-வின் மருத்துவ அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் வைத்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் சிவசங்கர் பாபா-வை விமானம் மூலம் சி.பி.சி.ஐ.டி போலீசார் அன்று இரவே சென்னை அழைத்து வந்து மறுதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஜூன் 21 தேதி மனுத்தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து ஜூன் 18 ஆம் தேதி சிவசங்கர் பாபா-விற்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா-வின் மருத்துவ அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர். இன்று போலீஸ் காவலில் எடுப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் சிவசங்கர் பாபாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை எனக்கூறி அது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சிவசங்கர் பாபா சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.