அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக போராட்டம் -பாமகவினர் கைது!

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக போராட்டம் -பாமகவினர் கைது!

திண்டிவனத்தில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட  பாமகவினர் நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று சிறுபான்மை பிரிவு முதலமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொள்ளும் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய சாவு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செந்தில் மஸ்தான் சாராய வியாபாரி என்று குறிப்பிடப்படும் மரு.ராஜன் என்பவர் முன்பு பாமகவில் இருந்து திமுகவிற்கு வந்ததாகவும் இது குறித்து பேசும் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவதூறு பரப்பியதாகவும் அவருக்கு கருப்பு கொடி காட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக  கூட்டம் நடைபெறும் இடம் நோக்கி வந்தனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து பேருந்தில் ஏற்றினார்.

சிறிது நேரத்தில் மீண்டும் பா.ம. க கட்சியை சேர்ந்த அனைவரும்  பேருந்தில் இருந்து இறங்கி அமைச்சர் செஞ்சி மஸ்தான் மன்னிப்பு கேட்கும் வரையில் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன் என்று தொடர் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று மஸ்தான் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்காக வந்திருக்கும் திமுகவினர் ஏராளமானோர் அருகில் இருக்கும் மண்டபத்தில் இருந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருந்தது.  பின்னர் காவல்துறையினர் பாமகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிக்க:யார் இந்த தாராவி மாடல் சிறுமி ?