பெண்களின் உள்ளாடைகளை திருடும் சைக்கோ திருடன்.. பரமக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

பரமக்குடி பகுதியில் பெண்கள் உள்ளாடைகளை திருடி செல்லும் சைக்கோ திருடனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

பெண்களின் உள்ளாடைகளை திருடும் சைக்கோ திருடன்.. பரமக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகத்சிங் ரோடு குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. .
இந்த குடியிருப்பு பகுதியில் தினமும் ஒரு சைக்கோ திருடன் உலா வருவதாகவும், வீடுகளின் வெளியில் கட்டப்பட்டிருக்கும் கொடிகளில் காயும் பெண்கள் உள்ளாடைகளை திருடி செல்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் தினமும் உலா வரும் சைக்கோ இளைஞனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.அப்போதுதான் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. பெண்களின் உள்ளாடைகளை தினமும் திருடிச் செல்லும் அந்த சைக்கோ இளைஞர் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் உள்ளாடைகளை சேகரித்து வைத்திருந்ததும், உள்ளாடைகளுடன் உல்லாசமாய் இருந்தும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து அந்த குடியிருப்புவாசிகள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

 இவ்வாறு குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சைக்கோ இளைஞரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி அங்கு வசித்து வரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.