
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையில் முதல் நிலை செயல் அலுவலர்கள் மற்றும் தொகுதி ஏழு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியும் 7 ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி...!