நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வனவிலங்குகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்...

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் உலா வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வனவிலங்குகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்...

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்லும் சாலையில் பகல் நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் அதிகமாக வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் முதுமலை சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும் போது, சாலை ஓர மரத்தில் கரடி ஒன்று நின்று கொண்டு தனது முதுகை ஆனந்தமாக சொரிந்தது. இந்த காட்சியை சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதேபோல்  கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜக்கனாரை கிராமத்தில் தற்போது பேரிக்காய் சீசன் அதிகமாக உள்ளதால் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், கரடி மரத்தில் ஏறி பேரிக்காயை தின்றுவிட்டு அதே பகுதியில் சுற்றித் திரிந்ததால் தேயிலை விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.