சென்னை முழுவதும் விடிய விடிய மழை... தொடர் சாரல் மழையால் பொதுமக்கள் அவதி...

சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை முழுவதும் விடிய விடிய மழை... தொடர் சாரல் மழையால் பொதுமக்கள் அவதி...

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை  விடிய விடிய நீடித்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், பாடி, அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை, சைதாபேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.தொடர் சாரல் மழை காரணமாக சென்னை முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்  சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டு மணி நேரம் நீடித்த கனமழையால் வந்தவாசி நகரப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.