நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு.!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு.!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆனையர் பழனிகுமார் வெளியிட்டுள்ளார்.