டைமிங் பிரச்சினையால் நடத்துனர் மீது தாக்குதல்; பணி பாதுகாப்பு கோரி அரசு பேருந்து ஊழியர்கள் தர்ணா!!

டைமிங் பிரச்சினையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி பேருந்துக்ளை இயக்காமல் பேருந்து ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
டைமிங் பிரச்சினையால் நடத்துனர் மீது தாக்குதல்; பணி பாதுகாப்பு கோரி அரசு பேருந்து ஊழியர்கள் தர்ணா!!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்து நடத்துனர் சிவலிங்கம் என்பவரை நேற்று மாலை டைமிங் பிரச்சினை காரணமாக தனியார் பேருந்தை சார்ந்த மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஊழியர்கள் டைமிங் பிரச்சினை காரணம் காட்டி அடிக்கடி தகராறில் ஈடுபடுவதால் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி அரசு பேருந்துகளை பணிமனையில் நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பெரிய அளவில் பதிப்பு ஏற்படவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com