புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து.. அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு!!

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து.. அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு!!

தேர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த கண்ணன் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து:

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற  தேர் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  கோவில் பணியாளர்கள்  பக்தர்கள் என எட்டு பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேர் விபத்து தொடர்பாக  அமைச்சர் சேகர்பாபு ஆயு்வு:

இந்த நிலையில் தேர் விபத்து நடந்த இடத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தார்.

தேர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு :

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையில் தவறு இருந்தால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சிகிச்சை பெற்று வரும் எட்டு பேரில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சரட தெரிவித்தார்.