ஊறுகாய் பாக்கெட்டில் இறந்து கிடந்த பூரான்.!

சிவகாசி வாடிக்கையாளர் வாங்கிய பிரபல ஊறுகாய் பாக்கெட்டில் இறந்த நிலையில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊறுகாய் பாக்கெட்டில் இறந்து கிடந்த பூரான்.!

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் காலனியில் குடியிருந்து வரும் செல்வின் என்பவர், தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு உதவியாக தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்திலிருந்து அவரது மைத்துனர் எபனேசர,  அன்றாடம் சிவகாசிக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

சிவகாசி வந்து செல்லும் எபனேசர் தனது கிராமமான சத்திரப்பட்டியில் உள்ள ஒரு கடையில் சாப்பாட்டிற்காக ஊறுகாய் பாக்கெட் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி அன்றுன் ஊறுகாய் வாங்கி வந்துள்ளார் எபனேசர்.

இந்நிலையில் செல்வின் உணவருந்தும் போது தனது மைத்துனர் எபினேசர் வாங்கிவந்த ஊறுகாய் பாக்கெட்டை உடைத்து ஊறுகாயை வெளியே எடுக்க பாக்கெட்டை பிதுக்கி உள்ளார்.  அப்போது அந்த பாக்கெட்டில்  உயிரிழந்த நிலையில் விஷத்தன்மை கொண்ட பூரான் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த காட்சியை அனைவருக்கும் காண்பித்த செல்வின் அதனை தனது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவும் பல்வேறு தரப்பினருக்கும் பகிர்ந்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ள செல்வின் சுகாதாரம் இல்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டுவரும் பிரபல ஊறுகாய் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.