"திமுக தொண்டர்கள் நினைத்தால், ஆடு பிரியாணியாக ஆக்கப்படும்", ஆர் எஸ் பாரதி காட்டம்!

"திமுக தொண்டர்கள் நினைத்தால், ஆடு பிரியாணியாக ஆக்கப்படும்", ஆர் எஸ் பாரதி காட்டம்!

மேலூரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுக தொண்டர்கள் நினைத்தால் தான் ஆடு, ஆடாக இருக்கும், இல்லை என்றால் பிரியாணியாக ஆக்கப்படும், என்று பாஜக தலைவர் அண்ணாமலையை சாடியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே, திமுக வடக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், சூர்யா வெற்றிக்கொண்டான், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுகவினர் ஆளும் கட்சியினராக இருப்பதால் பழைய உணர்வுகள் இல்லை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கு ஒரு பிரச்சனை என்றால், பெற்ற பிள்ளை கட்டிய மனைவியை விட்டு விட்டு ஓடி வருகின்றவன் தான் திமுகவில் இருக்கின்ற தொண்டன், அதுபோல வேறு எந்த கட்சிகளிலும் கிடையாது, என பேசியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் நான் காமராஜரை பற்றி பேசியதற்காக பாஜக தொண்டர் ஒருவர் என்னை காலனியால் தாக்க வந்தார்.அவருக்கு திமுக தொண்டர்கள் சரியான கவனித்தார்கள், எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது திமுக தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கொஞ்சம் காலம் அதையெல்லாம் நாம் விட்டிருந்தால், இன்று ஆட்டு குட்டி எல்லாம் ஓவராக எகுறுது, என சாடியுள்ளார்.

மேலும், திமுக தொண்டர்கள் நினைத்தால் தான் ஆடு, ஆடாக இருக்கும். இல்லை என்றால் பிரியாணியாக ஆக்கப்படும். திமுக வரலாறு தெரியாமல் சிலர் சவால் விட்டு கொண்டிருக்கின்றனர், என கூறியுள்ளார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் பெங்களூர் சென்று திரும்ப முடியாது என்று அண்ணாமலை மிக கேவலமாக பேசி வருகின்றார். அண்ணாமலை, ஒருத்தருக்கு பிறந்திருந்தால் ஸ்டாலின் பெங்களூர் சென்று வருவதை தடுத்து பார்க்கட்டும், அண்ணாமலை அப்புறம் என்ன ஆவார் என்று தெரியும், எனவும் சாடியுள்ளார்.

மேலும், திமுகவை அழித்து, ஒழித்து விடலாம் என்று ஆயிரம் மோடி வந்தாலும் முடியாது. அண்ணாவும், கலைஞரும் திமுக தொண்டர்களுக்கு ஊட்டிய உணர்வு, சாகும் வரை எங்களை விட்டு போகாது, எனக் காட்டமாக பேசியுள்ளார்.

இதையும் படிக்க || ஆளுநரை விமர்சித்து சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!!