நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ் .சிவாஜி காலமானார்!

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ் .சிவாஜி காலமானார்!
Published on
Updated on
1 min read

பிரபல நகைச்சுவை நடிகரும் நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர் எஸ் சிவாஜி காலமானார்.

80 களில் நடிகர் கமலஹாசனின் திரைப்படங்களில் பெரும்பாலும் காணப்படும் நகைச்சுவை நடிகர் ஆர்எஸ் சிவாஜி. விக்ரம் சத்யா அபூர்வ சகோதரர்கள் என இவர் நடிகர் கமலஹாசன் திரைப்படங்களில் நடித்த இவர்  நடிகர் சந்தான பாரதியின் சகோதரரும் ஆவார்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான கார்கி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னர் அவர் நடித்திருந்த திரைப்படமான கோலமாவு கோகிலா வரை நகைச்சுவை கதாப் பாத்திரத்தில் நடித்திருந்த இவர் கார்கி திரைப்படத்தில் முக்கியமான குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில் இன்று நடிகர் ஆர்எஸ் சிவாஜி உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com