"ஆர்எஸ்எஸ் திரைமறைவில் செயல்படக்கூடிய இயக்கம்..." - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்

"ஆர்எஸ்எஸ் திரைமறைவில் செயல்படக்கூடிய இயக்கம்..." - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்

மதுரை அரசு மருத்துவமனையில் இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், இந்திய கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர், கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை நன்கு தேறி உள்ளது. இன்னும் ஓர் இரண்டு நாட்களில் வீடு திரும்ப உள்ளார்.

ஓராண்டுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் அவர் உள்ளார். எனவே தமிழக அரசு வழங்கிய நிதி உதவி போதாது, கூடுதலாக பொருள், நிதி உதவி வழங்க வேண்டும். பாஜக, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஓர் இயக்கம். ஆனால், ஆர்எஸ்எஸ் திரைமறைவில் செயல்படக்கூடிய இயக்கம் என்பதாலேயே அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என கூறியுள்ளார். 

இதையும் படிக்க : சிவனை பக்தி பரவசமாக வழிப்படும் நாய்... சேலத்தில் நடந்த விநோதம்...