கழகத்தின் விதியை மாற்றக் கூடாது...அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் - ஓபிஎஸ்!

கழகத்தின் விதியை மாற்றக் கூடாது...அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் - ஓபிஎஸ்!

Published on

அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், அதிமுக பிரமுகர் கஜேந்திரன் வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற  செய்வேன் என்று  திருமதி வி கே சசிகலா கூறி இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியை மாற்றியிருப்பதாக கூறினார். எனவே, பழைய விதி தொடர்ந்தால் மட்டுமே, பொதுச்செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com