திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்!! காரணம் என்ன?!!

திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்!! காரணம் என்ன?!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அதன் முதன்மை உறுப்பினர் மற்றும் பிற பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்:

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே 7,897 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர்.

செய்தியாளர் சந்திப்பு:

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் தொடர்ந்து ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது என்றும், அரசியல் சாசனத்தைப் பாதுகாத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் "இப்போது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது மற்றும் அரசியலமைப்பு தாக்கப்பட்டு, ஒவ்வொரு அமைப்பும் உடைக்கப்படும் போது, ​​தேசிய அளவில் அமைப்புத் தேர்தல்களை நடத்தி நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உதாரணத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. தேர்தலுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவியேற்பார்.

அனைத்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், சி.எல்.பி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் மற்றும் இதர அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்  அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக நேரு-காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

ட்ரோல் ட்வீட்:

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை ட்ரோல் செய்யும் படத்தை திமுக கட்சியின் செய்தி தொடர்பாளரான ராதாகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து, ராதாகிருஷ்ணன் மீது திமுக நடவடிக்கை எடுக்கும் விதமாக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

துரைமுருகன் விளக்கம்:

கட்சியின் விதிகளை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கே. எஸ். ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்படுவதாக துரைமுருகன் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

                                                                                                                                        -நப்பசலையார்

இதையும் படிக்க:    சசி தரூர் அளித்த புகார் கடிதம்....!! கண்டித்த காங்கிரஸ்...!! காரணம் என்ன?!!