செயலிழந்த தகவல் காட்சி பலகை- கடும் சிரமத்திற்கு ஆளாகும் ரயில் பயணிகள்

சென்னை சென்ட்ரல் மேற்கு நுழைவு வாயிலில் உள்ள செயலிழந்த தகவல் காட்சி பலகையால் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

புறநகர் ரயில்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகள் மேற்கு நுழைவு வாயிலை பயன்படுத்தி சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் நுழைகின்றனர்.  ரயில் நிலையத்தின் இந்தப் பகுதியில் உள்ள ஒரு பெரிய எலக்ட்ரானிக் போர்டு, ரயில் நேரம், பயணம் குறித்த தகவல்களைக் காட்டும் அந்த எலக்ட்ரானிக் தகவல் பலகை சில வாரங்களுக்கு முன்பு செயலிழந்திருந்தது.

இதன் விளைவாக, கடைசி நிமிடத்தில் ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் இரயில் நிலையத்திற்கு உள்ளே சென்று பிரதான காட்சி பலகை பகுதிக்கு ஓட வேண்டி உள்ளது. இதனால் ரயிலின் இருப்பிடத்தைக் கண்டறிய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதால், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் கூறுகின்றனர்.