சென்னை பட்டாளத்தில் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் கடைகளுக்குள் புகுந்த மழை நீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை பட்டாளத்தில் நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் மழை நீர் தேங்கியதால், நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும், ஆஞ்சநேயர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் மற்றும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.