காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு...

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி காந்தின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு...
Published on
Updated on
1 min read

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி  மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருத்துவமனையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் . மேலும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ வல்லுனர்களிடமும் தகவல்களை கேட்டறிந்தார்.

ரஜினிகாந்துக்கு கழுத்துப் பகுதி ரத்த நாளத்தில் நேற்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தற்போது ரஜினிகாந்த்  தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் 5 வது தளத்தில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள்  மூலம் ரஜினிகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், மேலும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com