ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லுவார் ......செல்லூர் ராஜு

ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லுவார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லுவார் ......செல்லூர் ராஜு
Published on
Updated on
1 min read

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,


மக்களுக்கு திமுக இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் நிதி கூட எங்களுக்கு ஒதுக்கிடு செய்யவில்லை. தொகுதியில் வளர்ச்சிப்பணிகளை செய்ய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

நடிகர் ரஜினி மனிநேயமிக்கவர். எவ்வளவு பெரிய பதவி வந்தாலும், பாராட்டு வந்தாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய மாபெரும் தலைவர் என கூறிய அவர், விரைவில் பூரண நலம் பெற்று ரஜினிகாந்த் வீடு திரும்ப வேண்டும் என்றார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி கொண்டு வந்த அத்தனை திடட்ங்களையும் திமுக மறைக்க பார்க்கிறது என கூறிய அவர்,  தமிழகத்தில் 2000மினி கிளினிக்குகள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே மக்கள் நலன் கருதி அம்மா மினி கிளினிக்குகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதனால் திமுக அரசுக்கு நல்ல பெயர் தான் கிடைக்கும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com