கோட்டையை நோக்கிப் பேரணி...! தடுத்து நிறுத்திய போலீசார்...!! 

கோட்டையை நோக்கிப் பேரணி...! தடுத்து நிறுத்திய போலீசார்...!! 

தமிழ்நாடு அரசு பணியாளர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு  சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்வதற்கான முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.

பழைய ஓய்வூதிய திட்டம், ஒப்படை விடுப்பு, அகவிலைப்படி நிலுவை, அவுட்சோர்சிங் முறை ஒழிப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயற்சி செய்தனர். இடையிலேயே அவர்களை மறித்த   காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேரணி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்கள் மற்றும் ஆசிரிய சங்கங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும் , நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு நிர்வாகத்தில் பொறுப்பேற்றுதற்குப் பிறகு இதுவரை எந்தவித அறிவிப்பும் உறுதியளித்தவாறு வெளியிடப்படவில்லை, மேலும் கோரிக்கைகளை வைத்துள்ள சங்கங்களை அழைத்து பேசவும் இல்லை என்பதை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது.

 ஏற்கனவே சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 28ஆம் தேதி ஒரு நாள் அடையாள  வேலை நிறுத்தம் செய்யப்பட்டது ஆனாலும் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதால் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்ட பட்டு இருந்ததாகவும் சங்கங்களினுடைய சிறப்பு தலைவர் தெரிவித்தார்.