'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' : நீர் சமநிலை முன்மாதிரி திட்டம் தொடக்கம்...!

'ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை'   : நீர் சமநிலை முன்மாதிரி திட்டம் தொடக்கம்...!

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு ஏரிகளை அகலப்படுத்தும் பணிகளில் தொண்டு நிறுவனங்களும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தொவித்துள்ளார். 

சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் பார்வை திறனற்றவர்களுக்கான லிட்டில் பிளவர் கான்வென்டில் ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை என்ற அமைப்பின் நீர் சமநிலை முன்மாதிரி திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்.

நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் ஹெங்க் ஓவிங்க் , துணை தூதர் எவூட் டி விட், ஜெர்மனி தூதர் மைக்கேல் குச்லர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சோதனை முயற்சியாக சிறுமலர் பள்ளி வளாகத்தில் விடுதியில் தங்கி இருக்கக்கூடிய 300 மாணவர்கள் பயன்படுத்தும் கழிவு நீர் பல கட்ட படிநிலைகளை தாண்டி வைக்கப்பட்டு நீர் மட்டும் செடிகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் சில செயல்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இந்த கழிவுநீரில் இருக்கக்கூடிய நைட்ரஜன் பாஸ்பரஸ் போன்றவை செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படும் இதனைத் தாண்டி கிடைக்கக்கூடிய நீர் குடிநீராக பயன்படுத்துவதை தவிர மற்ற பயன்பாடுகளுக்கு உதவும்.

பொதுவாக நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நீர் உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் கழிவு நீராக கடலிலோ சாக்கடைகளிலோ கலந்து வீணாகும். ஆனால் இந்த நடைமுறைப்படி செயல்படுத்தினால் ஒரு சுழற்ச்சியாக பயன்படுத்தப்படும் கழிவுநீர் 100 சதவிகிதத்தில் 80 சதவிகிதம் நீர் மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாற்ற இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் நிறுவனத்தை சார்ந்த சுதிந்திரா என்பவர் தெரிவித்தார்.

அமைச்சர் கே என் நேரு நிகழ்ச்சி மேடையில் பேசிய போது,

” தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 7 கோடி மக்களுக்கு உதவும் வகையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீர் வழங்குவதற்கு மட்டும் தமிழக முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். 

சென்னையை தேர்ந்தெடுத்தற்கு நன்றி, நாள் ஒன்றுக்கு 3000 எம் எல் டி தண்ணீர் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. 800 எம் எல் டி தண்ணீர் சென்னையில் சுத்தப்படுத்தபடுகிறது. 

2000 எம் எல் டி தண்ணீர் தரும் அளவுக்கு அரசு செயல்பட்டு வருகிறது. 100 சதவீதத்தில் 80 சதவீதம் தண்ணீரை மீண்டும் நல்ல தண்ணீராக மாற்ற முடியும் என்று தெரிவித்து உள்ளனர்”,  என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,...

” ஏற்கனவே ஆயிரம் எம் எல் டி வரை கொண்டு வருகிறோம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மேற்கொண்டு 250 எம் எல் டி தண்ணீர் வரக்கூடிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

புழல் ஏரி, பூண்டி எரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வரும் சென்னையை பொருத்தவரை தண்ணீர் பற்றாக்குறை இருக்காது வெயில் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் அறிவுரையின்படி கூட்டம் நடக்க இருக்கிறது.

மேலும் ஏற்கனவே இருக்கக்கூடிய குளங்களையும்  ஏரிகளையும் அகலப்படுத்தி மழை நீர் சேமிப்பு பணிகளையும் செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

சென்னையை சுற்றி இருக்கிற திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் உள்ள ஏரிகளிலும் மற்றும் சென்னையில் இருக்கக்கூடிய ஏரிகளையும் அகலப்படுத்தி எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு அரசும் தொண்டு நிறுவனங்களும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து பணியாற்றி செயல்படும்.

மழைநீர் வடிகால் பணிகளை நாளை முதலமைச்சர் பார்வையிட இருக்கிறார். ஏற்கனவே செய்யப்பட்டு வந்த பணிகளில் சில பகுதிகள் இணைக்கப்படாமல் இருந்தது முதலில் அந்த இணைப்பு பணிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பணிகள் நிறைவு பெறும்.

காவிரி நீர் பிரச்சனையில் நீர்வளத் துறை அமைச்சர் முதலமைச்சருடன் ஆலோசித்து எங்களுக்கு 25 ஆயிரம் கன அடி நீர் தேவைப்படுகிறது என்று கூறி இருக்கிறார் கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுவோம்”,  என தெரிவித்தார்.