அதி கனமழை தொடரும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...

அதி கனமழை தொடரும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை தொடரும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. 

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 9ம்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வட தமிழக கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 5 நாட்களுக்கு ஆந்திரா கடலோரப் பகுதி மற்றும் தமிழகம் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதனிடையே, சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னையில் மிக கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தொடர்புகொள்ள தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 04425619206, 04425619207, 04425619208 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு  கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com