
தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், அரசு பேருந்துகள் சேவை கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. அக்டோபர் முதல், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏசி பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்.
இதற்கென பேருந்துகளை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி, மொத்தமுள்ள 702 குளிர்சாதன பேருந்துகளில் 153 பேருந்துகளை முதற்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் இன்று கொரோனா விதிகளை பின்பற்றி, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 12 குளிர்சாதன பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. மக்களின் வரத்தை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.