”பாஜகவின் மதவாத வாலை.....” கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆ. ராசா!!

”பாஜகவின் மதவாத வாலை.....” கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆ. ராசா!!

திமுகவின் துணை பொதுச்செயலாளராக மீண்டும்  பொறுப்பேற்ற பிறகு மேடையில் பேசியுள்ளார் ஆ.ராசா.

சிறப்பு பணி:

" நம்பிக்கை , மன நிறைவுடன் இதுவரை பணியாற்றினேன் . தலைமைக் கழக பணிகளையும் சிறப்புற ஆற்றுவேன்.” எனக் கூறியுள்ளார் ஆ. ராசா.  

ஜனசங்கம் குறித்து அண்ணா:

அண்ணா முதலமைச்சராகி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவரிடம் பத்திரிகையாளர்கள்  இந்தியாவில் ஜனசங்கம் ஆட்சிக்கு வருமா? என்று எழுப்பிய கேள்விக்கு ”வராது என்றும்  வந்தால்  இந்தியா இந்தியாவாக இருக்காது” என்றும் கூறியிருந்ததை இங்கு குறிப்பிட்டார் ஆ.  ராசா. 

பாஜகவுடன் கருணாநிதி:

“அரசியலில் சில நேரங்களில் சிலரை ஏற்று ,சில நேரம்  உதாசீனப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும். பாஜகவுடன் கருணாநிதி கூட்டணி வைத்தபோதும்  குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் செயல்பட்டார் கருணாநிதி.” என்றும் தெரிவித்துள்ளார் ஆ. ராசா.

மேலும் “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து , அயோத்திராமர் கோயில் , பொது சிவில் சட்டம் கூடாது என்பன உள்ளிட்ட செயல்திட்டங்களை உறுதி செய்தே அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி” என்றும் கூறியுள்ளார்.

அதனோடு “ஆர்எஸ்எஸ்சின் முக்கியமான கோரிக்கைகளை ஏற்காமல் கூட்டணி வைத்து பாஜக கையை கட்டிப்போட்ட பெருமை கருணாநிதியையே சேரும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

அஞ்சும் பாஜக:

திரவிட மாடலுக்கு மோடி அமித்ஷா அஞ்சுகின்றார் எனவும் ”பிடல் காஷ்ட்ரோ இப்போது இல்லை என அமெரிக்கா நினைப்பதுபோல் , கருணாநிதி இல்லை என பிரதமர் மோடி நினைக்கிறார். கருணாநியிதிக்கு பின்னால் பாஜகவின் மதவாத வாலை ஒட்ட நறுக்குகின்ற ஒரே  தலைவர் ஸ்டாலின் தான்” எனவும் தெரிவித்துள்ளார் ஆ. ராசா.

இதையும் படிக்க:   பிரம்ம குமாரிகள் இயக்க பொன்விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!!!