தமிழக அரசின் உத்தரவு எதிரொலி... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தமிழக அரசின் உத்தரவு எதிரொலி... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் குளங்கள் கோவிலைச் சுற்றியும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. குறிப்பாக மதுரை To கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாற்கடல் எனும் குளம் ஒன்று உள்ளது. இதன் கரையை ஆக்கிரமித்து டீக்கடை மற்றும் வொர்க் ஷாப் இயங்கி வந்தது. 

இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்களை மீட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குளத்தின் கரையில் அமைந்துள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்த நபர்கள் தங்களின் பொருட்களை முன்கூட்டியே எடுத்து சென்று விட்டதால் கட்டிடங்கள் மட்டும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் கோவில் சொந்தமான இடங்கள் விரைவில் மீட்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.